16 குழந்தைகள் உயிரிழப்புnbspகோரக்பூரில் மீண்டும் சோதனை

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

 

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதில் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 6 குழந்தைகள் வயிற்று போக்கு காரணமாகவும், மற்றவர்கள் மூளை அழற்சி நோய் காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர்கள், மூளை அழற்சி நோயின் காரணமாக இதுவரை 36 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 1470 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 310 பேர் மரணமடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

More News >>