பாகுபலி வில்லன் ராணா திடீர் கோபம்.. சமையல்காரரை கூடவே அழைத்து செல்கிறேனா?..
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். வில்லனாக ராணா நடித்திருந்தார். அவரது கட்டுமஸ்தான உடற்கட்டை பாராட்டாதவர்களே இல்லை. அந்தளவுக்கு உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை மெருகேற்றியிருந் தார் ராணா..
ராணாவின் ஆஜானபாகு தோற்றம் ரசிகர்கள் கண்களில் முழுமையாக பதிந்திருந்தது. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை அவரது தரப்பினர் மறுத்திருந்தனர்.
இந்நிலையில் ராணாவின் புகைப்படம் ஒன்று நெட்டில் வெளியானது. அதில் உடல் மெலிந்து காய்ச்சல் வந்தவர் போல் சோர்வாக காணப்பட்டார். அவரது படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சில நாட்களுக்கு பிறகு தெளிவான முகத்துடன் ஒரு படத்தை ராணா பகிர்ந்தார். தனது பழைய தோற்றத்துக்கு ராணா விரைவில் திரும்புவார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கின்றனர்.
'ராணா எப்போதும் வீட்டில் சமைத்த உணவைத்தான் சாப்பிடுவார். இதற்காக தனது சமையல்காரரை எங்கு சென்றாலும் உடன் அழைத்து சென்றுவிடுகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த ஹவுஸ்புல் 4 படப்பிடிப்பில் பங்கேற்க சென்றபோதும் அவர் கையோடு சமையல்காரரை அழைத்துச் சென்றதாக ஒரு ஆங்கில இதழில் தகவல் வெளியானது.
அதைக்கண்டு ஆவேசம் அடைந்த ராணா,'எனது சமையல்காரர் சமைக்கும் உணவைத்தான் நான் உண்பேன் என்ற எந்த பாலிசியும் எனக்கு கிடையாது. யாரோ என்னைப்பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். லண்டனில் நடந்த ஹவுஸ்புல் 4 படப்பிடிப்பிற்கு நான் செல்லவில்லை என்று கோபமாக பதிலடி தந்திருக்கிறார்.