சிரஞ்சீவியால் ஜான்சிராணி அங்கீகாரம்.. நடிகை அனுஷ்கா ஹேப்பி..

திரையுலகில் நடிகை அனுஷ்காவுக்கு சுவீட்டி என்று செல்ல பெயர் உண்டு. இனிமையாகவும், அமைதியாகவும் அனைவரிடமும் பழகுவதால் அவருக்கு இந்த செல்லப் பெயர் வந்தது. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

சிரஞ்சீவி நடித்து திரைக்கு வந்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா, தமன்னா ஹீரோயின்களாக நடித்திருக் கின்றனர். இதில் ஜான்சிராணி கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை கேட்டனர். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். ஆனாலும் பட தரப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிலிருந்து தனது சொந்த செலவில் வந்து நடித்து கொடுத்துவிட்டு சென்றார்.

சைரா நரசிம்ம ரெட்டி யார் என்பதை ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காதான் தொடங்கி வைப்பது போன்று படத்தில் காட்சி இடம்பெற்றது. தனது சொந்த செலவில் வந்து சைரா படத்தில் ஈடுபாடுடன் நடித்துக்கொடுத்தது பற்றி சிரஞ்சீவியும் மற்றும் அவரது மகனும் தயாரிப்பாளருமான ராம் சரண் இருவரும் அனுஷ்காவை மனதார பாராட்டினர்

தனக்கு அந்த வேடத்தை அளித்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த அனுஷ்கா,' நான் நடித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு நன்றி. இந்த நம்பமுடியாத பயணத்திற்காக ராம்சரண், சிரஞ்சீவி, இயக்குனர் சுரேந்தர் ரெட்டி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி' என தெரிவித்திருக்கிறார்.

More News >>