விஜய்யின் பிகில் டீசர் 12ம் தேதி வெளியீடு
விஜய் நடித்த தெறி, மெர்சல் படத்தையடுத்து இயக்கிய அட்லி மீண்டும் விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தை இயக்கிவருகிறார்.
இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. அதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் டீஸர் வராததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
இதுகுறித்து படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம், 'டீஸர் எப்போது வெளிவரும்' என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து டீஸர் வெளியிடும் நாள் விரை வில் அறிவிக்கப்படும் என்று நேற்று முன் தினம் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் வரும் 12ம் தேதி டீஸர் வெளியாகும் என்று நேற்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.