பாடகராக மாறிய கவுதம் மேனன்...
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளது. மேலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய வெப் சீரியல் 'குயின்' காட்சிகளையும் முடித்திருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
இதையடுத்த சூர்யா, சிம்பு நடிக்கும் படங்களை இயக்குவதற்கான பேச்சும் நடக்கிறது. இந்நிலையில் பப்பி என்ற படத்திற்காக பாடகராக மாறியிருக்கிறார் கவுதம் மேனன். உயிரே வா என்ற பாடலை தருண்குமார் இசையில் அவர் பாடினார்.