நீங்கள் என்ன பாகிஸ்தானியா? பாஜக பெண் வேட்பாளர் அதிரடி..
அரியானாவில் பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்களைப் பார்த்து, நீங்கள் பாகிஸ்தானியா? என்று பாஜக பெண் வேட்பாளர் சோனாலி கேட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வடமாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து அமைப்பு மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், சிறுபான்ைமயினரை கட்டாயப்படுத்தி, ஜெய்ஸ்ரீராம் என்றும், பாரத் மாதா கீ ஜெய் என்றும் சொல்ல வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை மத்திய அரசு மறுத்தாலும் ஆங்காங்கே ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ே்தர்தலில் அதாம்பூர் தொகுதி பாஜக வேட்பாளராக சோனாலி போகத் போட்டியிடுகிறார். டிக்டாக் பிரபலமான இவர், பிரச்சாரத்தின் போது மக்களிடம் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிடச் சொல்கிறார். இந்த வகையில் ஒரு பொதுக் கூட்டத்தில் அவர், இந்த முழக்கத்தைச் சொன்ன போது கூட்டத்தின் ஒரு புறம் இருந்த இளைஞர்கள் அதை சொல்லாமல் அவரைப் பார்த்து சிரித்தபடி நின்றனர்.
இதனால் கோபமடைந்த சோனாலி, நீங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறீர்களா? நீங்கள் பாகிரஸ்தானியா? உங்களை மாதிரி சில இந்தியர்கள், பாரத் மாதா கீ ஜெய் சொல்லாமல் மட்டமான அரசியல் செய்கிறீர்கள். உங்கள் வாக்கு மதிப்பே இல்லாதது... என்று பொரிந்து தள்ளினார். இந்த வீடியோக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதும், சோனாலி விளக்கம் கொடுத்துள்ளார். அந்த கோஷம் போட மறுத்த இளைஞர்களே தன்னிடம் வந்து வருத்தம் தெரிவித்ததாக அதில் கூறியுள்ளார்.