லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்.. புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்..
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் முழுக்க லண்டனில் உருவாகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
டி 40 படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடி யுள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.