பச்சன் சாதி அடையாளம் இல்லை .. அமிதாப் திடீர் விளக்கம்..
அமிதாப்பச்சன் ஜாதி பெயரை தன் பெயருடன் இணைத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரைப்பற்றி சிலர் சர்ச்சை எழுப்பினார்கள். சமூக அக்கறையோடு எல்லா விஷயங்களையும் பேசும் நீங்கள் (அமிதாப்பச்சன்) பெயருக்கு பின்னால் பச்சன் என்று சாதி பெயரை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சைரா நரசிம்ம ரெட்டி பட நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப்பச்சன் பங்கேற்றார். அப்போது பச்சன் பெயர் இணைப்பு குறித்து கூறினார். அவர் கூறும்போது, 'பச்சன் என்பது எனது குடும்ப பெயர். எந்த மதத்தையும், ஜாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்துக் கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர்.
அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்தார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போதுகூட மதம் பற்றி என்னிடம் கேட்பார்கள் அவர்களிடம் நான் இந்தியன் என்று கூறுவேன். நான் எந்த மததையும் சேர்நதவன் இல்லை' என்றார் அமிதாப்பச்சன்.