சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்தார்..
கன்னடத்தில் ஹிட்டான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார் சிம்பு.
இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்று தரப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பிற்கு சிம்பு சரியாக வருவதில்லை, இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக முப்டி ரீமேக் படம் டிராப் செய்யப் பட்டதாகவும் கோலிவுட்டில் பரவி வந்தது. ஆனால் அதை தயாரிப்பாளர் உறுதி செய்யவில்லை