48 மணி நேரத்தில் உருவாகிறது 370.. ஆணழகன் போட்டியில் வெற்றியாளர் ஹீரோ..
நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து 'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் தயாரித்தளித்த பாபுகணேஷ் அடுத்து '370' என்ற படம் இயக்குகிறார். இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆர்ட்டிகிள் 370, சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கோணத்தை பிரதிபலிக்கும். தேசிய ஒற்றுமை எதிரொலிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோவாக நடிக்கிறார். 40 நாட்கள் படப்பிடிப்பு நடித்து முடிக்க வேண்டிய இப்படத்தை 4 கேமராவைக் கொண்டு 48 மணி நேரத்தில் முடித்து சாதனை படைக்க திட்டமிட்டிருக் கிறார் இயக்குனர் பாபுகணேஷ். ஜாக்குவார் தங்கம் ஸ்டன்ட் பயிற்சி அளிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர்-நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.