விஜய், அஜீத், தனுஷ் பற்றி ஷாருக்கான் புகழ்ச்சி.. அற்புதம். நண்பர். நேசம் மிக்கவர்..
இந்தி ஷாருக்கான் கடந்த ஒரு வருடமாக புதிய படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதுடன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். ஆனாலும் ஷாருக்கான் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆஸ்க் மி எஸ்ஆர்கே ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களை சந்தித்துக்கும் ஷாருக், அவர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
தமிழ் ரசிகர்கள் சிலர் விஜய், அஜித், தனுஷ் போட்டோக்களை அவருக்கு அனுப்பி, இவர்கள் மூவரைப்பற்றியும் ஒரு வரியில் உங்கள் பதில் என்ன என்று கேட்டனர். அதற்கு ஷாருக்கான் பதில் அளித்தார் விஜய் அற்புதம். அஜித் எனது நண்பர். தனுஷ் நான் நேசிக்கும் நபர் என்று பதில் அளித்துள்ளார்.
ஷாருக்கின் இந்த பதிலை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.