அசுரன்களை கொண்டாடிய தனுஷ்-வெற்றிமாறனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு..
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை இயக்கி உள்ளார் வெற்றி மாறன். தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்த படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை பாராட்டி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் காலா, கபாலி, அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியவர்.அவர் கூறும்போது,' தமிழ்த்திரையில் 'அசுரன்' கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு ஆகியோருக்கு வாழ்த்துகள்.
அதேபோல் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள். உரக்க சொல்லுவோம், நிலமே எங்கள் உரிமை என்று என ப. ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி படக்குழுவிற்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.