ஜோக்கர் பட நாயகியின் ஹேர் ஸ்டைல் குறும்பு...
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் ஆண் தேவதை படத்தில் நடுத்தர குடும்பத்தை சேரந்தவராக நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன்.
அவர், சமீபத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பாக பேசப்பட்டார். இந்நிலையில் ஆண்கள் போன்று கிராப் வெட்டிய ஹேர் ஸ்டைலுடன், புகைப்படம் வெளியிட்டுள் ளார். அதைக்கண்ட நெட்டிசன்கள், புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக முடியை வெட்டி விட்டார் போல என்று கமென்ட் பகிர்ந்தனர்.
அதற்கு பதில் அளித்த ரம்யா, முடியை வெட்டவில்லை, புள்ளிங்கோ கெட்-அப்பிற் காக, விக் மட்டும் தான் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த குறும்புத்தனமான ஹேர் ஸ்டைலை பாராட்டிய சில ரசிகர்கள், ”உங்க முகமே மாறிப்போச்சு... ஆனாலும் நல்லாத்தான் இருக்கு” என்றும் ஜோவியலாக தெரிவித்துள்ளனர்.