விஜய் பிகில் பட வதந்திக்கு ஃபுல்ஸ்டாப்...
வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம். மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. இந்நிலையில் பிகில் படம் பற்றி நெட்டில் வதந்திகள் உலா வந்தன.
வரும் 12-ஆம் தேதி பிகில் படத்தின் ட்ரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டதை தொடர்ந்து பிகில் படத்தின் விநியோகத்தை தொடங்கி உள்ளது படக்குழு. ஆனால் கேரளாவில் பிகில் படம் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை என்று தகவல் பரவியது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வதந்திக்கு பதில் அளிக்கும் வகையில் பிகில் கேரள விநியோகம் பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
பிகில் படத்தின் திரையரங்க உரிமையை கேரளாவில் பிரித்விராஜ் வாங்கி உள்ளார் என்ற தெரியவந்துள்ளது.
இதையடுத்து கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.