ஒய்.ஜி. மகேந்திரன் மகள் அமெரிக்காவில் கைதா? திரையுலகில் பரபரப்பு
ரஜினிகாந்தின் மனைவி லதாவின், சகோதரி மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி, நிகழ்ச்சி ஒன்றுக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.
சரியான விசா இல்லாததால், சிகாகோ விமான நிலை யத்தில், மதுவந்தி கைது செய்யப்பட்டதாக வும், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து, திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பரபரப்பான தகவல் வெளியானது. இது திரையுலகினை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து மதுவந்தி கூறும்போது, ''என் விசாவில் ஒரு தவறு இருந்தது. எனவே, அதைப் பயன்படுத்த முடியாது. ஊருக்குச் சென்று, சரியான விசாவோடு வாருங்கள் என, அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.' அதனால், சென்னைக்கு திரும்பினோம். இப்போது,மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளேன். நான், கைது செய்யப்படவில்லை,'' என்றார்.