ரஜினி 168வது படம் சிவா இயக்குகிறார்... எந்திரன், பேட்ட படத்தையடுத்து சன்பிச்சர்ஸ் தயாரிப்பு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதில் ரஜினிகாந்த நடித்த காட்சிகள் முடிவடைந்துள்ளது. இன்னொரு பாடல் காட்சி மட்டும் படமாகவிருக்கிறது. இப்படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜீத் நடித்த வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் கதையமைத்து வெற்றிப் படங்களை தந்த சிவா, ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கும் கிராமத்து பின்னணியில் ஒரு திரைக்கதையை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் இமேஜை உயர்த்திய வெற்றிப் படங்களான அருணாச்சலம், முத்து, படையப்பா, சந்திரமுகி ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. அந்த வரிசையில் இப்படமும் இடம் பிடிக்கும்.

More News >>