கிரிக்கெட் வீரருடன் உதயம் என் எச் 4 நடிகை திருமணம்.. மும்பையில் டிசம்பர் 2ம் தேதி நடக்கிறது..
சர்வதேச மற்றும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் நடிகை அஷ்ரிதா ஷெட்டிக் கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி இவர்களது திருமணம் மும்பையில் நடக்கிறது. தமிழில் உதயம் என்எச்4, ஒரு கன்னியும் மூணு களவானிகளும், இந்திரஜித், நான் தான் சிவா போன்ற படங்களில் நடித்துள்ளார் அஷ்ரிதா.
குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும் இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் பங்கேற்கும், ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். திருமணத்துக்கு பிறகு அஷ்ரிடா படங்களில் நடிக்கமாட்டார் என்று தெரிகிறது.