ரூ 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சூர்யா.. காப்பான் பட குழு கேக் வெட்டி கொண்டாட்டம்..
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வசூல் ரீதியாக 100 கோடியை தொட்டிருப்பதன் மூலம் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்திருக்கிறது.
இதனை பட நிறுவனம் லைகா தெரிவித்திருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது. ஆனால் சாதனை வெற்றியென்பது அபூர்வமானது. லைகா நிறுவனம் தயாரிப்பில் காப்பான் படம் மொத்த வசூலில் 100 கோடி தொட்ட படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் எங்கள் நன்றி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் வெளியான காப்பான் திரைப்படம் அவருக்கு விட்ட இடத்தை பிடித்து கொடுத்தது. லைகா நிறுவனம் அடுத்து பெரிய திரைப்பட முயற்சிகளை தொடர் நம்பிக்கை அளித்த காப்பான் பட குழுவுக்கு நன்றி' என தெரிவித்திருக்கிறது.
100 கோடி வசூல் ஈட்டியடிதால் காப்பான் படக் குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டடியது.
காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யா தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க அறக்கட்டளைக்கு ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.