அஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..
அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். இந்தியில் அமிதாப் நடித்து வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருந்தது வினோத் இயக்கியிருந்தார். தற்போது இதே கூட்டணியில் மீண்டும் அஜீத் படம் உருவாகிறது.
இதற்காக வினோத் சொந்தமாக ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார். இதற்காக பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு பை பை சொல்லி கறுப்பு ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். அஜீத்.கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் ஆங்காங்கு சென்று வரும் புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர், நடிகைகள் தேவை அதற்கான தேர்வு நடக்கிறது என்ற பெயரில் நெட்டில் விளம்பரங்கள் செய்வதுடன் மெசேஜும் அனுப்பி யாரோ மோடியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
இதுகுறித்து தெரிவித்திருக்கும் போனிகபூர் எங்களது பட நிறுவனத்துக்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதுபோன்ற போலியான ஆசாமிகளிடம் யாரையும் நம்பி ஏமாறும் பட்சத்தில் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என வழக்கறிஞர் குழுவினரிடம் கலந்துபேசி அறிவிப்பு நோட்டீஸ்.