இயற்கை பட ஹீரோயின் குட்டி ராதிகா ரீ என்ட்ரி..

நடிகை குட்டி ராதிகாவை நினைவிருக்கிறதா? எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் அறிமுகமானவர்.

வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 'தமயந்தி' என்ற பேய் படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் இப்படம் வெளியாகிறது.படம் குறித்து இயக்குநர் நவரசன் கூறும்போது,' 18-ம் நூற்றாண்டு காலத்திலும், தற்போதைய காலத்திலும் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

குட்டி ராதிகா இளவரசியாக வருகிறார். இந்த படம் அவருக்கு திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் லோகி, ராஜாபகதூர், தபலாநானி, மித்ரா, கிரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.கணேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் ' என்றார்.

More News >>