படம் வெளியான தினத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர். இவர், ரெஃப்ளக்ஷன்ஸ் இன் ஏ கோல்டன் ஐ என்ற திரைப்படம் மூலம் 1967-ம் ஆண்டு அறிமுகமானார்.
மார்லன் பிரண்டோ, எலிசெபத் டெய்லர் ஆகியோருடன் இப்படத்தில் அவர் நடித்திருந்தார். ஜாக்கி பிரவுன், தி பிளாக் ஹோல், அலிகேட்டர், லண்டன் ஹேஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராபர்ட், சிகிச்சை பலனின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் நேற்று இறந்தார்.
எல் கேமினோ ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராபர்ட் பார்ஸ்டர். இப்படம் நேற்று வெளியானது. படம் வெளியான அன்று அவர் இறந்ததால் அவரது ரசிகர்களும், படக்குழுவினரும் சோகத்தில் ஆழ்ந்ததனர்.