தீபாவளி போட்டியில் விலகியது விஜய்சேதுபதி படம்.. விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி மோதுகிறது..
தீபாவளி கவுண்ட் தொடங்கியத்திலிருந்து தியேட்டரில் யார் யார் மோதப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.
அதற்கு மெல்ல மெல்ல விடை கிடைத்து வருகிறது. முதலில் தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் என 3 படங்கள் மோத தயாராக இருந்தன. இதனால் 3 படங்களின் புரமோஷன் பணிகளும் வேகமாக நடந்து வந்தது.
இந்நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரேஸில் இருந்து திடீரென விலகியுள்ளது. வரும் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஒன்றில் வெளியாகும் சங்கத்தமிழன் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு பிகில், கைதி ஆகிய 2 படங்கள் போட்டி களத்தில் இருக்கப்போவது உறுதியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் படங்கள் வெளியாகுமா அல்லது முன்னதாக வெள்ளிக்கிழமையே ரிலீஸ் ஆகுமா? என்பது இனிதான் தெரியவரும்.
விஜய்யின் பிகில் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் டிரெய்லரை ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.