இந்தி பேசி நடித்தார் கீர்த்தி... பாலிவுட்டில் சாதிப்பாரா? திரும்பி வருவாரா?
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார். இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியிருக்கிறார்.
ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்க அமீத் ரவீந்திரநாத் சர்மா இயக்கும் மைதான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக நடிக்கிறார் கீர்த்தி. இதில் கால்பந்தாட்ட கோச்சாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கீர்த்தி பங்கேற்று நடித்தார். இதில் இந்தி பேசி நடித்தார். அவரது உச்சரிப்புக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உதவியிருந்தார்.
ஜான்வியின் தந்தை போனிகபூர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதால் ஜான்வி, கீர்த்தி இருவரும் புதிய தோழிகளாக மாறியிருக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா என்பதை படத்தின் வெற்றிதான் தீர்மானிக்கும்.
விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என தமிழில் பரபரப்பாக நடித்துவந்த கீர்த்தி தற்போதைக்கு புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏற்கனவே இந்தியில் காஜல் அகர்வால், தமன்னா போன்ற பல நடிகைகள் நடிக்கச் சென்று தக்க இடத்தை பிடிக்க முடியாமல் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்பி வந்தனர். அவர்களைப்போல் அல்லாமல் கீர்த்தி சாதிப்பாரா? அல்லது மற்றவர்கள் போல் திரும்புவாரா என்பதும் அவர் நடிக்கும் இந்தி பட வெளியீட்டுக்கு பிறகுதான் தெரியவரும்.