ரஜினியோடு டூயட் பாடுவாரா ஸ்ரேயா தர்பார் ஷூட்டிங்கில் திடீர் சந்திப்பு
ஒவ்வொரு படம் முடித்த பிறகும் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்று தியானத்தில் ஈடுபடுவதை கடந்த பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடித்துகொடுத்த கையோடு இன்று காலை அவர் இமயமலைபுறப்பட்டு சென்றார்.
முன்னதாக தர்பார் படப்பிடிப்பில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தபோது நடிகை ஸ்ரேயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினார். பின்னர் அவருடனும், ஏ.ஆர்.முருகதாஸ் உடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவரது இந்த திடீர் சந்திப்புக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
தர்பார் படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியிருக்கிறது. அந்த பாடல் காட்சியில் ஸ்ரேயா நடிக்க வாய்ப்பிருக்கிறது என பேச்சு உள்ளது. ஆனால் இப்படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருவதால் அவரே ரஜினியுடன் இந்த டூயட்டிலும் நடிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை.
சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். அப்படத்தில் பல்லேலக்கா... பாடல் காட்சியில் ரஜினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் நயன்தாரா. அந்த பார்முளாவை தர்பார் படத்தில் உள்வாங்கி ரஜினியுடன் தற்போது நயன்தாரா ஜோடியாக நடிக்கும் நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இமயமலையிலிருந்து திரும்பி வந்ததும் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் டப்பிங் பேச உள்ளார். பாடல் காட்சியொன்றும் நடிக்க உள்ளார். அதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் 168 வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.