நடிகையின் போன் நம்பர்கேட்ட ஹீரோ..

ரசிகர், ரசிகைகள் என தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நோட்டா, அர்ஜூன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு சில நடிகைகளுக்கும் கனவு நாயகனாக இருக்கிறார்.

ஆனால் அவரே இந்தி நடிகை அலியாபட்டுடன் பேசுவதற்கு துடியாய் துடித்திருக்கும் விஷயம் வெளியாகி உள்ளது.

பாலிவுட் நடிகை அலியாபட். தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கிறார். இந்தியில் அவர் நடித்த, 'கல்லி பாய்' சமீபத்தில் திரைக்கு வந்தது. அதை பார்த்ததிலிருந்து அலியாபட்டுடன் பேசவும், அவரிடம் பாராட்டு தெரிவிக்கவும் துடியாய் துடித்தார் விஜய் தேவரகொண்டா. பலரிடம் அலியாவின் செல்போன் எண்ணை கேட்டும் கிடைக்காததால் இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹரிடம் செல்போன் எண்ணை கேட்டார்.

More News >>