நவதீப்புக்கும் சன்னி லியோனுக்கும் என்ன தொடர்பு? செல்பி எடுத்துக்கொண்ட நட்சத்திர ஜோடி
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், இது என்ன மயக்கம் போன்ற படங்களில் நடித்த நவ்தீப் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.
கவர்ச்சி நடிகை சன்னிலியோனுடன் நவ்தீப் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அவருக்கும் சன்னிக்கும் என்ன தொடர்பு என்று பலரும் கேட்டு வருகின்றனர். நவ்தீப் நடிக்கும் படமொன்றில் சன்னி லியோன் நடனம் ஆடுகிறார். அப்போது இருவரும் செல்பி எடுத்துக்கொண்டதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் ஏக்தா கபூர் இயக்கும் ராகினி எம்எம்எஸ் 3ம் பாகம் வெப் சீரிஸில் சன்னிலியோன் நடிக்கிறார். அதில் நவ்தீப்பும் நடிக்கிறார். அப்போது இருவருக்கும் நட்பு உருவாகி அதில் செல்பி எடுத்துக்கொண்டார்களாம்.
நவ்தீப்புடன் எடுத்த செல்பியை சன்னி தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, 'நவ்தீப்புடன் பணியாற்றியது ரொம்பவும் அருமை. அவர் இனியானவர்' என குறிப்பிட்டிருக்கிறார். சன்னி வெளியிட்ட மெசேஜை பகிர்ந்திருக்கும் நவ்தீப், 'உங்களுடன் பணியாற்றியது எனது பாக்யம். நீங்கள் ரொம்புவும் கலகலப்பானவர்' என கூறி உள்ளார்.