பிகில் படத்தில் அரசியலா?.. தயாரிப்பாளர் பதில்..
விஜய் நடித்த தலைவா முதல் சமீபத்தில் வெளியான சர்க்கார் வரை அரசியல் பிரச்னைகளை பேசியது. அதுபோல் பிகில் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றே கூறப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி கூறுபோது. எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளில் ஒன்று அரசியல் படம் எடுக்கக்கூடாது என்பதுதான். எனவே பிகில் படத்தில் அரசியல் இருக்காது. அதேசமயம் ஸ்போர்ட்ஸ் அரசியலாக்கப்படுவது குறித்த காட்சிகள் இருக்கும். இது பெண்களுக்கான படம். ஒரு பெண் சமுதாயத்தில் முன்னேற சந்திக்கும் சவால்களை எப்படி முறியடிக்கின்றார் என்பது தான் இந்த படத்தின் கதை. ஆனால் பிகில் படத்தில் நீங்கள் யாருமே எதிர்பாராதது ஒன்று இருக்கும்என்றார்.
ஆனாலும் பிகில் படத்தின் ஆடியோ ரிலீசின்போது அரசியல் பேனர் சாய்ந்து ஒரு பண் பலியானது விஜய் பற்றி பேசியது அரசியல்வாதிகள் சிலரின் கண்டனத் துக்கு உள்ளானது.