விஜய் பட ட்ரைலருக்கு போலீஸ் திடீர் தடை.. ரசிகர்கள் திரண்டதால் சென்னையில் பரபரப்பு..
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
வழக்கமாக விஜய் படத்தின் டிரைலர் வெளியாகும் போது, தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பட்டும். சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிகில் டிரைலருக்கு ரசிகர்கள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். சனிக் கிழமை மாலை 5 மணி முதலே இதற்காக பல்வேறு நிகழ்வுகள் ரசிகர்களுக்காக காத்திருப்பதாகவும், இந்தக் கொண்டாட்டத்துக்கு காரில் வர வேண்டாம் என்றும், கார் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த திரையரங்க டிவிட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறைய திட்டமிட்டோம். திட்டமிட்டபடி அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன்.
ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.