திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த படம் 96 இதில் விஜய் சேதுபதி ராமசந்திரன்(ராம்), பாத்டிரத்டிலும் த்ரிஷா ஜானகி தேவி(ஜானு) கதாபாத்திரமும் ஏற்று நடித்தனர்.
இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. ஜானுவாக சமந்தாவும், ராமச்சந்திரனாக ஷர்வானந்தும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், மற்றொரு ஸ்பெஷல் படம் எனக்கு. முன்பு இருந்ததை விட என்னை சிறந்தவளாக மாற்றிய சவாலான கேரக்டர். இந்த ஜானு கனவு குழுவில் அங்கமாக இருந்த இயக்குநர் பிரேம் மற்றும் ஷர்வானந்திற்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார்.