பிகில் டிரைலருக்கு ஷாருக் சமந்தா பாராட்டு.. ஹாலிவுட் இயக்குனர் டிவிட்டர் கருத்து..
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தந்தை- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது..
நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின் மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் டிரைலரை யூடியூபில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பிகில் டிரைலரை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிகில் டிரைலர் சிறப்பாக இருந்தது. படம் எப்போது அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும்?. அமெரிக்காவில் சிறப்பு காட்சி திரையிடப்படுகின்றதா? என கேட்டிருக்கிறார். அதற்கு போன்ற நன்றி தெரிவித்த அட்லீ, சிறப்பு காட்சி குறித்த தகவலை நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக் கான். இயக்குனர் கரண் ஜோஹர் . நடிகை சமந்தா போன்றவர்களும் பிகில் ட்ரைலருக்காக விஜய். அட்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.