தடுமாற்றத்தில் உள்ளது.. இந்தியப் பொருளாதாரம்.. நோபல் வென்ற அபிஜித் பேட்டி

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரமர் ஆகியோர் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்ததற்காக நோபல் பரிசை வென்றுள்ளனர்.

அபிஜித் பானர்ஜி, ெகால்கத்தாவில் செயல்படும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டுக்கும், 2017-18ம் ஆண்டுக்கும் இடையேயான கிராமப்புற மற்றும் நகர்பகுதிகளில் மக்களின் நுகர்வு(வாங்கும் சக்தி) குறியீட்டின் சராசரியைப் பார்த்து இதை தெரிந்து கொள்ளலாம். முதல் முறையாக இது வெகுவாக சரிந்துள்ளது.

இந்திய அரசு தனக்கு சாதகமற்ற புள்ளிவிவரங்களை தவறாக எடுத்து கொள்கிறது. அரசுக்கு பொருளாதார சரிவு குறித்து நன்கு தெரியும். தேவை குறைவது பொருளாதாரத்திற்கு மிகவும் பாதிப்பு ஆகும். தேவை குறைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

More News >>