விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார்.

2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் மிக எதிர்பார்க்கப் பட்ட படங்களில் ஒன்றாக திகழும் சீயான் விக்ரம் 58, இர்பான் பத்தானின் வருகையின் செய்திக்குபின் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் முக்கியமான இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.

More News >>