கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
பாகுபலி வில்லன் நடிகர் ராணா டக்குபாதி, கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்தி படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் ராணா படத்துக்கு கால்ஷீட் தேதிகளை ஒதுக்கி தர முடியாத சூழல் இருப்பதாக கூறி அப்படத்திலிருந்து விலகிவிட்டராம்.
தற்போது நயன்தாராவுக்கு அந்த கொரிய மொழிப் படம் பிடித்துப்போகவே கதா நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் நயன்தாரா.
சமீபத்தில் நயன்தாரா நடித்த சைரா நரசிம்மரெட்டி சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து தீபாவளிக்கு விஜய்யுடன் நடித்துள்ள 'பிகில்', பொங்கல் தினத்தில் ரஜினியுடன் நடித்துள்ள 'தர்பார்' படங்கள் நயன்தாராவுக்கு வெளியாகவுள்ளது.