திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு இருவரும் சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்தனர். இதற்கிடையில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா, சாயிஷா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
கடந்த மே மாதம் 23-ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்கிறார். காளி, திமிரு பிடிச்சவன் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய சக்தி சரவணன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்கு பணியாற்றிய சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். குழந்தைகளை கவரும் விதமான படமாக இப்படம் உருவாகிறது.