ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாபடத்தில் நாயகனாக நடித்த ரியோ ராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதர்வா நடித்த பாணா காத்தாடி, செம போத ஆகாதே படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.
இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீஸன் நடிக்கிறார். டிராவல் ஸ்டோரியாக அதாவது பயணக் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கொடைக்கானல், கேரளா, குஜராத், சிக்கீம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
மேலும் பாலசரவணன், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், விஜி, சந்தானபாரதி, ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.