ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அக்.18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, சிதம்பரம் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச், சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

வாதங்கள் முடிவடையாததால், விசாரணை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இன்று(அக்.16) கைதுசெய்துள்ளனர். எனவே, சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றாலும், அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால்தான் அவர் சிறையில் இருந்து விடுதலையாக முடியும்.

More News >>