ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு ஜோடியாக சித்து பிளஸ்2வில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. குடும்ப பாங்கான முக அமைப்பு கொண்டவர் என்பதால் மார்டன் கதாபாத்திரங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்யாமலிருந்தனர்.
பின்னர் அந்த எண்ணத்தை தனது கிக்கான புகைப்படங் களை வெளியிட்டு உடைத்தார்.
ஹீரோயினாகமட்டுமல்லாnbn மல்bl சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இந்நிலையில் ராதாமோகன் இயக்கும் புதியபடத்தில் நடிக்க சாந்தினிக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண் டிருக்கிறார் சாந்தினி. அப்படம் முடியும் தருவாயில் உள்ளது.
இதுபற்றி சாந்தினி கூறும்போது,' நான் நடித்த படங்களில் இப்படங்கள் எனக்கு மிக முக்கிய மானதாக இருக்கும். , ராதா மோகன் என திறமையானவர்களின் படங் களில் எனது நடிப்பு வெளிப்படப்போகிறது ' என்றார்.