ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. பட அறிவிப்பு வெளியானதும் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். அங்கு ஆன்மிக தளங்களுக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவதுடன், ஆசிரமங்களுக்கு சென்று சன்னியாசிகளிடம் ஆசியும் பெற்றுவருகிறார்.
இமயமலை பயணம் முடித்துக்கொண்டு திரும்பியபிறகு சிவா படத்தின் படப்பிடிப் பில் எப்போது பங்கேற்க உள்ளார் என்ற விவரம் தெரியவரும். அநேகமாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கிராமத்து பின்னணியிலான குடும்ப பாச கதையாக உருவாகும் இப்படத்தில் ஜோதிகா, கீர்த்தி முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் ஜோதிகா. கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை முதன்முறையாக ரஜினி படத்தில் நடிக்கிறார் என்றாலும் அவரது தாயார் மேனகா 1981ம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.