வெற்றிமாறன் இயக்கும் புதியபடம்... ஹீரோவாக நடிக்கப்போவது யார்?.
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன். தனுஷ், மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதுடன், வணிக ரீதியாக ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வெற்றி மாறன் அடுத்ததாக எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். வெகு விரைவில் இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கப்போவது யார். மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கக்கூடும் என்ற ஒரு தகவலும் சில நாட்களுக்கு முன் கசிந்தது.