டாக்டருக்கு ஜோடியாக நடிக்கும் சனம் ஷெட்டி.. 24 மணி நேர் சம்பவ படம்..

டாக்டர் படிப்பை முதுநிலை முடித்துவிட்டு அறுவை சிகிச்சைகள் செய்து வரும் டாக்டர் அலெக்ஸ், சினிமா ஆசையில் நடிப்பு இயக்கம், தயாரிப்பு பொறுப்புகள் எற்று உருவாக்கியிருக்கும் படம் எதிர் வினையாற்று.

இப்படத்தை இளமைதாஸ் என்பருடன் இணைந்து இயக்கியுள்ள அலெக்ஸ் படம் பற்றி கூறும்போது,'எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அதன்பின் அந்த இளைஞன் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து மீள்கிறானா என்பதே படத்தின் கதை.

24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு முன் சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகனாக நான் (அலெக்ஸ்) நடிக்கிறேன். கதாநாயகியாக சனம் ஷெட்டி, முக்கிய வேடத்தில் ஆர்.கே.சுரேஷ், நரேன் நடித்துள்ளார்.

2ம் கதாநாய கியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத் ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை - ஷெரீப். அருவி பட இசை அமைப்பாளர் புகழ் வேதாந்த் பரத்வாஜ் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார்' என்றார்.

More News >>