திருமணத்தில் கிழிந்த சேலை உடுத்திய நடிகை.. கவர்ச்சி நடிகையின் பாட்டி சென்டிமென்ட்..
கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. அதிரடியாக கவர்ச்சி உடையில் தனது படங்களை வெளியிடுவதுடன் அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர்.
வெளிவுலகுக்கு தன்னை கவர்ச்சியாகவும், துணிச்சல் பெண்ணாகவும் காட்டிக்கொள்ளும் ராதிகா ஆப்தே உள்ளுக்குள் சென்டிமென்ட் நிறைந்தவராக இருக்கிறார். தனது திருமணத்தின்போது அவர் தன் பாட்டியின் கிழிந்த சேலை உடுத்தியிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனி டிக்ட் டெய்லர் என்பவரை மணந்தார் ராதிகா ஆப்தே. மணமகன் பெனிடிக்ட், டிப் டாப்பாக கோட்டு சூட்டு அணிந்திருந்தார் ஆனால் அந்த திருமணத்தின்போது தனது பாட்டி உடுத்தியிருந்த பழைய சேலையைதான் திருமண சேலையாக ராதிகா ஆப்தே உடுத்திக்கொண்டார்.
அந்த சேலையில் சில இடங்களில் கிழிச்சல்களும் இருக்கின்றன. இப்போதும் வீட்டிலிருக்கும்போது அந்த சேலையை ராதிகா ஆப்தே உடுத்திக்கொள்கிறார்.