விஜய்தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசைப்படும் ரகுல்..
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பரபரப்பான ஹீரோவானார். தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
அவர் நடிக்கும் புதியபடத்தை தெலுங்க பட இயக்குனர் புரி ஜெகநாத் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக தன்னை தேர்வு செய்யும்படி நடிகை ரகுல் ப்ரீத் சிங் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, 'நான் அதிதீவிரமாகவே புரி இயக்கும் படத்திலும் குறிப்பாக விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக் காக காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக இப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரிடம் கால்ஷீட் கேட்டு வந்தது படக்குழு. அவர் இந்தியில் பிஸியாக இருப்பதால் தற்போதைக்கு கால்ஷீட் தர இயலாது என்று கூறிவிட்டார். ஜான்வி ஒதுங்கியிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் இயக்குனர் புரியிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார் ரகுல்.