மணிரத்னம் தயாரிக்கும் படத்துக்கு பாடல் பதிவு.. விக்ரம்பிரபு , மடோனா ஜோடி..
இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து 'வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறது.
இதன் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்தின் உதவியாளரும், படை வீரன் பட இயக்கியவருமான தனசேகரன் இயக்கி வருகிறார். இதில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு உட்பட பலரும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு சென்ற ஜூலை மாதம் துவங்கியது. இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுக மாகிறார் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம். சித் ஸ்ரீராமு டன் பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாம் கிராம் பக்கத்தில் வெளியிட்டு, வானம் கொட்டட்டும் படத்தின் முதல் பாடல் தற்போது பதிவு செய்யப் பட்டது.
சித் ஸ்ரீராம் இசையில் பாடலை பாடியதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.