ரீலீசுக்கு முன்பே தளபதியின் பிகில் ரூ.200 கோடி கலெக்‌ஷன் சேன்டில்வுட்டில் மட்டும் 8 கோடிக்கு மேல் விற்பனையான ரைட்ஸ்

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் ரசிகர்களை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு வந்திருக்கிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 25ந்தேதியே வெளியாகும் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ கோகுல் ஃபிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

பிகில் மற்றும் விசில் பட திரையரங்க வெளியீட்டு உரிமையை 8.5 கோடி ரூபாய்க்கு ஸ்ரீ கோகுல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், கர்நாடகாவில் எந்தெந்த திரையரங்குகளில் நடிகர் பிகில் படம் திரையிடப்படும் என்ற திரையரங்க பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜய்யின் பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் என இதுவரை படம் வெளியாவதற்கு முன்பே 200 கோடி வரை பிகில் படம் வசூல் செய்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கேரளாவில் தனக்கென தனி மார்க்கெட்டை ஏற்படுத்tதியிருக்கும் விஜய், கர்நாடகாவிலும் தனக்கான மார்க்கெட்டை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>