புவனேஷ், சஹால், கோலி எனக் கொண்டாடினோமே தல தோனியின் இந்த சாதனையை கவனித்தோமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆட்டத்தில் 'தல' தோனியின் புதிய சாதனையை நாம்மில் பலர் கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டோம்.

இந்தியக் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேர்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் தொடர், டி20 என நீண்டதொரு தொடர் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் அதிரடியால் ஒரு நாள் தொடரை எளிதாக வென்றுகாட்டியது இந்திய அணி. பந்துவீச்சாளர்கள் சஹால், யாதவ், கேப்டன் கோலி எனப் பலரின் அதிரடி ஆட்டங்கள் இந்திய அணியை முன்னிறுத்தியது.

இதையடுத்து பெரிய இடைவெளியின்றி உடனடியாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் களம் காணத் தொடங்கியது. விளையாடிய ஒரு போட்டியிலும் இந்திய அணி வெகு சிறப்பாக விளையாடி தனக்கான அக்மார்க் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது அதிரடிப் பந்துவீச்சால் புதிய சாதனையைப் படைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ஆனால், இந்த வெற்றிக்களிப்பில் யாருமே 'தல' தோனியின் சாதனையை கண்டுகொள்ளவில்லை.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரையில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட்கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரையில் இலங்கையின் சங்ககரா 133 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக இருந்தது.

ஆனால், தோனி சமீபத்திய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியின் மூலம் 134 கேட்சுகள் பிடித்து சங்ககாராவின் சாதனையை முறிய்டைத்துள்ளார். இந்த தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>