நயன்தாரா நெற்றிக்கண் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தது... காதலன், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வாழ்த்து..

நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும்'நெற்றிக்கண்'. இது 'பிளையண்ட்' என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் ஆகம். இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடிக்கிறார்.

விபத்தில் பார்வை இழந்த ஒரு பெண், கொடுரமான சீரியல் கொலைகாரனை தன்னுடைய அறிவாற்றல் மூலம் எப்படி கண்டு பிடிக்கின்றார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கிரிஷ் இசை அமைக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் கவனிக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக இயக்குனர் மிலந்த் ராவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு டிவீட்டை பதிவு செய்துள்ளார். அதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

More News >>