இறுதிசுற்று நடிகை ரித்திகாவுக்கு லக் அடிக்குமா?.. விஜய்சேதுபதி, அசோக் செல்வனுடன் இணைகிறார்

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் படம் ஓ மை கடவுளே'. ரித்திகா சிங் ஏற்கனவே இறுதி சுற்று படத்தில் நடித்திருந்ததுடன் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி, படங்களில் நடித்திருக்கிறார்.

ஓ மை கடவுளே படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிவி சீரியலில் நடித்த புகழ்பெற்ற வாணி போஜனும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன் ஓ மை கடவுளே படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங் இணைந்து நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் ஓ மை கடவுளே படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். நீண்டநாட்களுக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கிறார். படம் அவருக்கு திருப்புமுனை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More News >>