அஜீத் புதிய படம் ”வலிமை” கறார் போலீஸ் ஆகிறார்.. தல படத்துக்கு தொடரும் வி சென்டிமென்ட் ..
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தையும் இயக்குகிறார். இப்படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது.
அஜீத்தின் சமீபத்திய படங்கள் வீரம், விஸ்வாசம், விவேகம் என வி சென்டிமென்ட்டில் பெயர் வைக்கப்பட்டதுபோல் இப்படத்துக்கும் ஆங்கிலத்தில் வி என்று தொடங்கும் வகையில் வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது.
நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மீண்டும் அஜீத் நடிக்கும் இப்படத்தை தயாரிக்கிறார். கடந்த படத்தில் வழக்கறிஞர் வேடம் ஏற்றிருந்த அஜீத், வலிமை படத்தில் ஆக்ஷன் அதிரடி கறார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. போனிகபூர். எச்.வினோத் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர். பூஜையில் சாமி படங்களுக்கு அருகே மறைந்த ஸ்ரீதேவியின் உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.