அஜீத் டைட்டில் வெளியானதால் தளபதி 64 டைட்டில் வெளியீட வற்புறுத்தல்... நெட்டில் மோதல் தொடங்கியது...
தல அஜித்தின் 60வது புதிய படத்திற்கு நேற்று திடீரென்று பூஜைபோடப்பட்டதுடன், வலிமை என்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை என்ற டைட்டிலை தல ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கினர்.
அதைக்கண்டதும் தளபதி ரசிகர்கள் பரபரப்பாகி உள்ளனர். விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'தளபதி 64' என்று உத்தேச டைட்டிலை வைத்திருக்கின்றனர். இன்னும் ஒரிஜினல் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அஜீத் பட டைட்டில் வெளியானதையடுத்து தளபதி 64 டைட்டிலை வெளியிட வேண்டும் என்று தளபதி ரசிகர்கள் இணைய தளத்தை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த வெள்ளிக்கிழமை தீபாவளி சரவெடியாக பிகில் படம் வெளியாகவுள்ள நிலையில், 'தளபதி 64' படத்தின் தலைப்பை வெளியிடலாமா என தயாரிப்பு தரப்புக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ஃபேன் பேஜில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பிகில் ஃபீவரில் ரசிகர்கள் இருப்பதால், புத்தாண்டில் தளபதி 64 டைட்டிலை வெளியிடுங்கள் என சிலர் கூறி வருகின்றனர்.
சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் பட டைட்டில்கள், படத்தின் ரிலீசுக்கு முன்பு தான் சர்ப்ரைஸ் ஆக படக்குழு வெளியிடுவது வழக்கம். விஜய்யின் பிகில் வரும் 25ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினமோ அல்லது தீபாவளி பண்டிகை தினமான 27ம் தேதியோ 'தளபதி 64' பட டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட எண்ணி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதுவரை பட ரிலீஸில் போட்டியை ஏற்படுத்தி பரபரப்பை உண்டாக்கி வந்த தல, தளபதி ரசிகர்கள் தற்போது டைட்டில் விஷயத்திலேயே போட்டியை தொடங்கிவிட்டனர். தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் ரிலீஸ், தளபதி 64 டைட்டில் வெளியீடு என டபுள் டரீட் ஆகவும் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.