ஆதித்யா அருணாசலம் ஆன சூப்பர் ஸ்டார்... தர்பார் படத்தில் ரஜினி கதாபாத்திர பெயர் தெரிந்தது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, புனே போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள தாக இப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயர் தெரியவந்திருக்கிறது.
தர்பாரில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஆதித்யா அருணாச்சலம் என கேரக்டர் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஏ.ஆர்.முருக தாஸ் தெரிவித்துள்ளார். ஆதித்யா என்பது முருதாஸின் மகன் பெயர், அருணாச்சலம் என்பது அவரது தந்தையின் பெயராம்.